பள்ளியில் உணவு திருவிழா - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

குடியாத்தம் RS.சாலையில் உள்ள பிரம்மாஸ் பள்ளியில் உணவு திருவிழா மற்றும் விளையாட்டு விழா

Update: 2023-12-16 07:06 GMT

உணவு திருவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 வேலூர் மாவட்டம் குடியாத்தம் RS.சாலையில் உள்ள பிரம்மாஸ் பள்ளியில் உணவு திருவிழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ,மாணவிகள் தயாரித்த பல்வேறு உணவுகளை பார்வைக்கு வைத்தனர். பின்னர் உணவு திருவிழாவினை பள்ளியின் தாளாளர் ஹேமாசெந்தில் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளின் கண் கவரும் விளையாட்டு போட்டிகள் நீளம் தாண்டுதல்,வளையம் தாண்டுதல்,ஈட்டி எரிதல்,கயிறு இழுத்தல்,உள்ளிட்ட குழு போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டிகளில் வெற்றி மாணவ,மாணவிகளுக்கு பள்ளியின் தலைவர் கல்வியாளர் செந்தில்,பள்ளியின் தாளளார் ஹேமாசெந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள்,சான்றுகளை வழங்கினார். இதில் பள்ளியின் ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News