உணவுப் பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்று வழங்கும் முகாம்

Update: 2023-11-01 05:44 GMT

உரிமம் வழங்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் உணவுப் பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்று வழங்கும் முகாம் நடைபெற்றது. வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆபேத் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஸ்குமாா், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி காளிமுத்து ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று பேய்க்குளம் வியாபாரிகள் விண்ணப்பித்த மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்து, உரிமம், சான்று பெற்றனா். இதில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா்.
Tags:    

Similar News