மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பாத பூஜை!

புதுக்கோட்டை வைரம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர்.

Update: 2024-02-23 08:40 GMT
புதுக்கோட்டை வைரம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பாக தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். தமிழகத்தில் தற்பொழுது பத்தாம் வகுப்பு 11-ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதனை யடுத்து பள்ளி மாணவ மாணவியர் தேர்வுக்கு தங்களை தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரத்தி பெற்ற பள்ளிகளில் ஒன்றான பெரியார் நகரில் உள்ள வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியர் தற்பொழுது தேர்வு பங்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர் முன்னதாக சிவாச்சாரியார்கள் அதிகாலை கணபதி பூஜை மற்றும் நவபூஜை செய்தனர் குறிப்பாக சரஸ்வதிக்கு சரஸ்வதி பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு 11-ஆம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பெற்றோர்களின் பாதங்களில் முதலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர் இதனை தொடர்ந்து பால் ஊற்றி பாதங்களில் மஞ்சள், குங்குமம் வைத்து பூக்கள் போட்டு தங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு வேண்டிக் கொண்டனர் இதனை பெற்றோர்கள் இன்று போல் என்றென்றும் நீடுழி வாழவும் நன்கு படித்து நன்கு தேர்வு எழுதி பெற்றோர்களுக்கும் இப்பள்ளியில் பெருமைப்படுத்துவதில் நல்ல மதிப்பெண் எடுத்து பெருமை சேர்க்கும் என வாழ்த்தினார்கள். பின்னர் பள்ளி மாணவ, மாணவியர் தங்களது ஆசிரியர் ஆசிரியர்களின்காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு பாத பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஜாதி, மதம், பேதம் இன்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மதங்களை சேர்ந்த மாணவ மாணவியர் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News