ஆட்டோக்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரிக்கு ஆட்டோக்களில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை பார்த்து ரசித்தனர்.
Update: 2024-01-08 02:13 GMT
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 17 வருடங்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்குபெறும் ஆட்டோ சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலா பயணத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சுற்றுலா பயணம் 28 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்பயணத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து 19 ஆண்கள், ஏழு பெண்கள் உட்பட 26 பேர் சென்னையில் இருந்து கடந்த 28ஆம் தேதி தங்கள் பயணத்தை தொடங்கினர். இப்பயணம் பாண்டிச்சேரி தஞ்சாவூர் மதுரை தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வந்தனர். கன்னியாகுமரி வந்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி, பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர் . இவர்கள் பயணம் 1200 கிலோமீட்டர் தூரமாகும். 9 நாட்களில் கன்னியாகுமரி வந்துள்ளனர்.. கன்னியாகுமரிக்கு வந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.