மரக்கானம் அருகே ஆமைகுஞ்சுகளை கடலில் விடும் வனத்துறையினர்
வனத்துறையினர் முட்டைகளை சேகரித்து தற்காலிக முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாப்பாக முறையில் வைத்து ஆமைக்குஞ்சுகளாக பொறித்த பின்னர் கடல் நீரில் 98 ஆமை குஞ்சுகள் கடலில் விட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 12:08 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 37 கிலோமீட்டர் தொலைவு கடற்கரை பகுதியினை கொண்டுள்ளது. இந்த கடற்கரை பகுதியானது மரக்காணத்தில் ஆரம்பித்து கோட்டகுப்பம் வரை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சிற்றாமை எனப்படும். ஆலிவ்ரட்லி கடல் ஆமைகள் கடற்கரையில் பகுதியில் முட்டைகள் இட்டு செல்லும். இவ்வாறு இடப்படும் முட்டைகள் ஆனது தன் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வனத்துறையினர் மூலம் சேகரம் செய்து தற்காலிக முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாப்பாக முறையில் வைத்து ஆமைக்குஞ்சுகளாக பொறித்த பின்னர் கடல் நீரில் விடப்படுகிறது, இந்நிலையில் இந்த ஆண்டு இப்பணியானது முதலாவதாக மரக்காணம் வட்டத்தில் உள்ள தீர்த்தவாரி கடற்கரை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தற்காலிக பொரிப்பகம் அமைக்கப்பட்டு முட்டைகள் பாதுகாக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் டிசம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட முட்டைகளில் 98 ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டு அதனை இன்று வனத்துறையினர் பாதுகாப்புடன் கடலில் விட்டனர். புதிதாக பொறிக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலை கண்டதும் அசைந்து கடலில் சென்று சேர்ந்த நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.