விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை !
பழநி பகுதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் தங்க வேண்டாமென விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 06:09 GMT
யானை
பழநி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன.யானை கூட்டம் அடிக்கடி பழநி வனப்பகுதி அருகில் உள்ள அணைகளுக்கு வந்து நீர் அருந்த வருகின்றன. இதற்கிடையே அணைகளில் போதிய நீர் இல்லாததால் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து நிலக்கடலை, வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிட்டுள்ளனர்.இதனை யானை கூட்டம் நாசம் செய்யாமல் இருக்க விவசாயிகள் பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதில் கோபம் கொல்லும் யானைகள் விவசாயிகளை விரட்டுகின்றன.இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மாலை, அதிகாலை நேரங்களில் விவசாயிகள் அணைகளுக்குள் செல்ல வேண்டாமென்றும், இரவில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தங்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.