முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

Update: 2024-02-26 05:23 GMT

 பொதுக்கூட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன்,கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் வரவேற்றார்.

இதில்  இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் பரமசிவம்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் சுர்ஜித் சங்கர்,தலைமை கழக பேச்சாளர்கள் பார்த்தசாரதி,சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது,அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து வாக்குகள் பெறுவது குறித்து பேசினர்.

இதில் நாகை நகர கழக செயலாளர் தங்க கதிரவன்,மாவட்ட துணை செயலாளர் அபுசாலிஹ்,ஒன்றிய துணை செயலாளர் திருமேனி,திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல்பாசித்,மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர்,ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News