முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாள்

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-19 15:39 GMT

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகனின் 102 வது பிறந்தநாள் விழா  குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில், கட்சி அலுவலகத்தில் வடக்கு நகர தி.மு.க செயலாளர், நகராட்சி  தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். அன்பழகன் சாதனை குறித்து நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். இதில்  நகர பொறுப்புக்குழு உறுப்பினர்களும், நகர மன்ற உறுப்பினர்களும், முன்னாள், இந்நாள் மாவட்ட கழக, நகர கழக நிர்வாகிகளும், மகளிர் அணியினரும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News