ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர்
தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர்.
Update: 2024-04-19 06:48 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பகுதிகளில் காலை 7:00 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றன தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளரை கொண்ட கரூர் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன விராலிமலை தொகுதிகளில் மொத்தம் 255 பூத் மற்றும் 132 இடங்களில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகிறது 21 மண்டல அலுவலர்கள் தலைமையில் தேர்தல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுகண்காணிக்கப்பட்டு வருகிறது இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் தனது மனைவி ரம்யா விஜயபாஸ்கர் மற்றும் சகோதரர் உதயகுமார் உடன் வாக்களித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார். , ஒற்றை விரலால் ஓங்கி அடித்து விட்டேன் என்றும் கூறினார் புதிய இளம் வாக்காளர்கள் 100% தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார் நீண்ட நாள் பிரச்சாரத்திற்கு பிறகு வாக்களித்து வருகின்றன எங்கு பார்த்தாலும் இரட்டை இலை அலை வீசி வருகிறது என்றும் கூறினார்