சிந்தல்பாடியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

சிந்தல்பாடி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2024-05-01 15:46 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி,கடத்தூர் கிழக்கு ஒன்றியம் சிந்தல்பாடி பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தலை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் M.Sc,Phd, திறந்துவைத்தார்.கடத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் T.நெப்போலியன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ண குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்ன கிருஷ்ணன் சிந்தை ராஜேந்திரன் தலைமை கழக பேச்சாளர் இராசு தமிழ் செல்வன், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு தலைவர் குபேந்திரன்,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேந்திரன், பத்மாவதி சரவணன்,அசோகன், பொன்னன், சிவக்குமார், நாகேந்திரன், ஜெயவேல்,சதாம் உசேன், நல்லான், சிவக்குமார், நாகேந்திரன், ஜெயவேல், VC.தமிழன், துரை, சின்ன தம்பி, சேகர், மற்றும்பொது மக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News