முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு .....
மத்தாப்பு சிரிக்க மந்தையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார்.
மத்தாப்பு சிரிக்க மந்தையில் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் கட்சியின் கரூர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் தங்கவேல். இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங் கோவில் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பிரச்சாரத்தை, கரூர் மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இரவு மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஊர் மந்தையில் வாக்கு சேகரிக்க பிரச்சார திறந்த ஜீப்பில் வேட்பாளர் தங்கவேலுடன் பிரச்சாரம் மேற்கொண்டார் எம் ஆர் விஜயபாஸ்கர். அப்போது அவர்களுக்கு மத்தாப்புகள் சிரிக்கவும், முழங்கவும் ஆரத்தி எடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பு தெரிவித்தனர் ஊர் பொதுமக்கள். அப்போது, அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கும், விஜயபாஸ்கருக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இட்டு அவர்களுக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தனர் அப்பகுதி பொதுமக்கள்.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய எம் ஆர் விஜயபாஸ்கர், கடந்த சட்டமன்ற தேர்தலில் கொலுசும், டோக்கன் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி எங்கே இருக்கிறார்? புழல் சிறையில். அரவக்குறிச்சியில் போட்டியிட்டபோது, சொந்த நிதியில் 25 ஆயிரம் பேருக்கு மூன்று சென்ட் நிலம் தருவதாக கூறி வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் திரும்பி பார்த்ததுண்டா? என கேள்வி எழுப்பியதோடு, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜோதிமணி, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற பிறகு, தொகுதி பக்கம் எட்டிப் பார்த்தது உண்டா? வரும் வந்தால் ஐந்து வருடமாக எங்கே சென்றீர்கள்? என கேள்வி கேளுங்கள் ஐந்து வருடத்தில் தொகுதியில் செய்த திட்டங்கள் என்னவென்று கேளுங்கள் என கூறினார்.