ஈரோட்டில் முன்னாள் எம்எல்ஏ நினைவு தினம் அனுசரிப்பு
ஈரோட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-04 13:52 GMT
அஞ்சலி செலுத்திய காங்கிரசார்
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முன்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏமாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் EVKS இளங்கோவன், ஈரோடு கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கொங்கு கோவிந்தராசு உள்ளிட்ட கிழக்கு மாநகர பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.