மதுரையில் 50 வருடத்திற்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு படித்த அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் 50 வருடங்கள் கழித்து சந்தித்தனர்.;

Update: 2024-01-27 09:52 GMT

50 வருடங்கள் கழித்து சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்

50 வருடத்திற்கு பிறகு சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு படித்த அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள்  50 வருடங்கள் கழித்து சந்தித்தனர்.

இந்த சந்திப்பினை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பொன்விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் வெளி மாநிலத்திலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement

இதில் அவர்களுக்குள் பழைய ஞாபகங்கள் சந்தோசங்கள் துக்கங்கள் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான விளையாட்டுகளும் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய கரிகாலன் கூறும்போது குடும்பத்தில் பல கசப்புகள் இருக்கும் ஆனால் நண்பர்களிடையே யார் எந்த உயரத்தில் இருந்தாலும் நட்பு மட்டுமே இருக்கும். பள்ளிக்கூட நண்பர்கள் என்றாலே எந்த மதம் எந்த இனம் என்பதில்லை எல்லோரும் ஒரே மாதிரி இருப்போம் இன்று வரை அப்படித்தான் நாங்கள் இணைந்திருக்கிறோம்.

எங்கள் நண்பர்கள் இப்போது சமூகத்தில் பல்வேறு உயரத்தில் இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் எப்படி இருந்தோமோ அதே நிலைமையில் தான் இன்றும் இருக்கிறோம் நண்பர்கள் சந்திக்கும் இந்த பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News