தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்
பாளையங்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
Update: 2024-05-03 09:10 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பாளையங்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று (மே 2 ) நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் பழ வகைகளை வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.