சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்!

Update: 2024-07-20 05:55 GMT

ஃபார்முலா 4 கார் பந்தயம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் கார் பந்தயம் நடத்த மீண்டும் பணிகள் நடைபெறத் துவங்கியுள்ளது.

இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News