அரசலாற்றில் ரூ.5 கோடியில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் நகராட்சியில் அரசலாற்றில் குறுக்கே பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்கு குறுக்கே அரசலாற்றில் ரூ. 5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நடும் விழா நடந்தது.
கும்பகோணம் எம்எல்ஏ., அன்பழகன் தலைமை வகித்து அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) தாராசுரம் அண்ணலக்ரஹாரம் சாலையில், அரசலாற் றின் குறுக்கே ரூ. 5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நட்டு, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துசெல்வம், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் கவுன்சிலர்கள் நளினி, சுதா, ஊராட்சித்தலைவர் பிரேமாவதி, துணைத்தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.