மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டல்
தாராபுரம் காமராஜ புரத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான கட்டிடம் கட்டும் பணிக்கு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் மத்திய அமைச்சர் டாக்டர்.வீரேந்திர குமார் அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
Update: 2024-03-01 10:13 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரத்தில் சுமார் 50 ஆண்களுக்கு முன்பு மாணவர்கள் தங்கி படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதி அனைத்து வசதிகள் கொண்டு செயல்பட்டு வந்தது. கட்டிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.இதனை புதுப்பிக்க புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பள்ளி மாணவர்களின் மற்றும் பெற்றோர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு நடைபெறும் சட்டமன்ற மாநில கோரிக்கையின் போது தமிழ் நாடு முதல் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.இந்நிலையில் இதனை பராமரிக்க தமிழக அரசு மத்திய சமூக நீதி மற்றும் அதிகார துறையை கேட்டு கொடண்டதன் பேரில் மத்திய அரசு ரூ. 1.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.அப்போது ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காணொளி கட்சி மூலமாக மத்திய அமைச்சர் டாக்டர்.வீரேந்திர குமார்அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாட்கோ கோவை மண்டலம் செயற்பொறியாளர் சரஸ்வதி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சிவசங்கர் உள்பட பொதுமக்கள் மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.