சிம் கார்டு மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது !
விக்கிரவாண்டி அருகே சட்ட விரோதமாக சிம் கார்டு மோசடி ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் வெண்ணி, 21. இவரிடம், விக்கிரவாண்டியை சேர்ந்த நண்பர்கள், தாங்கள் 'டெலிகாலிங்' வேலை செய்ய உள்ளதாகவும், அதற்கு 'சிம் கார்டுகள்' தேவைப்படுவதாகவும் கூறி, அவரது ஐ.டி., புரூப் மூலம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு கடையில் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கினர்.பின்னர் அந்தக் கும்பல், வெண்ணிக்கு தெரியாமல், அவரது ஆதார் கார்டு மற்றும் கைரேகையை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட 'சிம்கார்டுகளை'பிற கடைகளில் வாங்கினர்.
இதுகுறித்து வெண்ணி கொடுத்த புகார்படி, விழுப்புரம் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வெண்ணியின் ஆவணங்களை பயன்படுத்தி, 'சிம் கார்டு' வாங்கியவர்கள் இணையதளம் வாயிலாக மோசடி செய்து வருவதைக் கண்டுபிடித்தனர்.அதைத் தொடர்ந்து வெண்ணியின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கி மோசடி செய்த விக்கிரவாண்டி அடுத்த சித்தணி மாரியம்மன் கோவில் தெரு ராஜ், 29; அன்பரசு, 29; போத்தியம்மன் கோவில் தெரு சதீஷ்குமார், 24; தமிழ்ச்செல்வன், 28; ஆகிய நான்கு பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த மோசடியில் தொடர்புள்ள சத்தியமூர்த்தி,30, கிருபா, 32; ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.