ஏரியில் மண் திருட்டு 4 பேர் கைது - டிராக்டர், ஜேசிபி பறிமுதல்.

லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-07 08:29 GMT

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக முதுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் லியோ டேனியலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை செய்தபோது அங்கு அனுமதியுன்றி 2 டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடித்து கல்லக்குடி காவல்நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.

போலீசாரின் விசாரணையில் முதுவத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த 42 வயதான செல்வகுமார், டிராக்டர் உரிமையாளர்கள் 37 வயதான சுரேஷ், 43 வயதான செல்வக்குமார், மாதாகோயில் தெருவைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் 33 வயதான ஜேம்ஸ்ராஜ் ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் அரை யூனிட் மண் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News