டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய வழக்கில் நான்கு பேர் கைது

நாமக்கல் மாவட்டம், தேவனாங்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி வழி கொள்ளையடித்து சென்ற நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-07 14:48 GMT

கொள்ளையடித்தவர்கள்

திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி பகுதியில் உள்ள 6002 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை கடந்த ஒன்றாம் தேதி இரவு கடையை மூடிவிட்டு மோளிய பள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சக்திவேல் என்ற டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து 94 ஆயிரம் பணத்தை ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் எடப்பாடி தாலுகா கச்சுப் பள்ளி, மேட்டுக்காடு, பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் அன்பழகன் 23, கொங்கணாபுரம் எருமைப்பட்டி நத்தக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் கருக்குபட்டை என்கிற விஜய்26, சங்ககிரி தாலுக்கா ஏகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் மகன் பல்ஸ் என்கிற விக்னேஷ் 21, இவரது அத்தை மகனும் கொள்ளை யடித்து வந்த பணத்தை பிரித்துக் கொடுத்த சங்ககிரி தாலுகா கண்ணந் தேரி ஓசரிப் பட்டி செல்வம் என்பவரது மகன் காமாலையன் என்கிற விஜய் 27ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தீபா உள்ளிட்ட போலீசார் பால்மடை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு வாகனங்களில் வந்த நாலு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால் பிடித்து விசாரித்த போது கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் பணத்தை ஆளுக்கு 20 ஆயிரம் என சமமாக பிரித்துக் கொண்டு மீதியை செலவு செய்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் பாபு முன்பு போலீசார் ஆஜர் படுத்தினார்கள். இவர்களை நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை அடுத்துஇவர்கள் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்துரொக்கப் பணம் ரூ.50,000 இவர்கள் ஒட்டி வந்த .பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனம் ஹோண்டா சைன் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News