காரை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து மோசடி !

காரை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து மோசடி ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-04 10:15 GMT
காவல் நிலையம்
தூத்துக்குடி எஸ்பிஐ கிளையின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக இருப்பவர் செந்தில்குமார் இவருக்கு கீழ் இயங்கி வரும் வங்கி ஒன்றில் விருதுநகர் பாலாஜி நகரைச் சார்ந்த செந்தில்குமார் என்பவர் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கார் வாங்க விண்ணப்பித்திருந்ததாகவும் 10 லட்சம் மதிப்பிலான கார் வாங்க தனியார் மோட்டார் நிறுவனத்தில் இவர் காசோலை அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செந்தில்குமார் வாங்கிய காரை தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றதாகவும் அவர் செய்த மோசடியால் 8,11,657 ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி எஸ்பிஐ மேலாளர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News