கிராம ஊராட்சி தலைவர் மீது மோசடி புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் மானத்தான் கிராம 9வது வார்டு உறுப்பினர் ராஜமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.;

Update: 2024-01-22 09:45 GMT


சேலம் மாவட்டம் ஓமலூர் மானத்தான் கிராம 9வது வார்டு உறுப்பினர் ராஜமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் மானத்தான் கிராம 9வது வார்டு உறுப்பினர் ராஜமுத்து மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இது குறித்து வார்டு உறுப்பினர் ராஜமுத்து செய்தியாளர்களிடம் கூறும் போது: மானத்தான் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் இந்த பகுதியில் படிக்கும் மாணவர்களின் பெயர், மற்றும் இறந்தவர்களின் பெயர் ஆகியவற்றை ஜல்ஜீவன் திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்து சுமார் 5 லட்சம் ரூபாய் வரை முறை கேடு செய்துள்ளனர். இதே போல பிரதம மந்திரி இலவச வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் என பல்வேறு திட்டங்களில் போலியான பெயர்களை கொடுத்து இதுவரை ஒன்றை கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர்.

Advertisement

இது குறித்து உறுப்பினர் கூட்டத்தில் நான் கேட்டபோது அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் அவரது கணவர் சிவாஜி ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் புகாரை எடுக்க மறுக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுத்து உரிய விசாரணை நடத்தி மக்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் மற்றும் அவரது கணவர் சிவாஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News