கூட்டுறவு சங்கத்தில் வேலை தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி
மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்;
Update: 2023-12-20 05:37 GMT
கூட்டுறவு சங்கத்தில் வேலை தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி
சேலம் பெரமனூரை சேர்ந்த சத்தியஜோதி, கொண்டப்பநாயக்கன்பட்டி மகேஸ்வரி. அயோத்தியாப்பட்டணம் சபிதா. இவர்கள் 3 பேர் நேற்று போலீஸ் துணை கமிஷனர் மதிவாணனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூட்டுறவு சங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தோம். சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்த 2 பேர் பணம் கொடுத்தால், பணி நிரந்தரப்படுத்துகிறோம் என்று கூறினர். இதை நம்பி 3 பேரும் மொத்தம் ரூ.28 லட்சம் அவர்களிடம் கொடுத்தோம். ஆனால் பணி நிரந்தரப்படுத்தவில்லை. இந்த நிலையில் முக்கிய பதவியில் இருந்த ஒருவரது பதவி காலம் முடிந்து விட்டது. இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது மிரட்டல் விடுக்கின்றனர். எனவே பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.