கேபிள் உபகரணங்கள் வாங்கியதில் ரூ.54.5 லட்சம் மோசடி - 4 பேர் மீது வழக்கு

சேலத்தில் கேபிள் உபகரணங்கள் வாங்கியதில் ரூ.54.5 லட்சம் மோசடி செய்த புகாரில் பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-05 04:08 GMT

பைல் படம் 

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடவேல் (வயது 60). இவர் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், நான் வீடுகளுக்கு தனியார் நிறுவனங்களின் இணையதளம் சேவை கொடுப்பதற்காக பைபர் கேபிள் அமைக்கும் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறேன். எனக்கு கீழ் கிருஷ்ணன், சின்னதம்பி, விஜயா, தினேஷ்குமார் ஆகியோர் சப் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றினர்.

இவர்களுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு இணையதள கேபிள் பதிப்பதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காக ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கேபிள் அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. மேலும் கேபிள் உபகரணங்கள் வாங்கியது மற்றும் செலவு தொகைக்கான கணக்கை சரியாக காட்டவில்லை. அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.54 லட்சத்து 61 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து வெங்கடவேலிடம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணன், சின்னதம்பி, விஜயா, தினேஷ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News