ஓமலூர் அருகே இலவசமாக ஜோதிட ஆலோசனை
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 11:51 GMT
ஓமலூர் அருகே இலவசமாக ஜோதிட ஆலோசனை
சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தி சிவன் கோயில் அருகே கேஜி திருமண மண்டபத்தில் சேலம் ஆத்தூர் ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயம் சார்பில் 324வது இலவச ஜோதிட ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி தொடங்கி வைத்த இந்த முகாமில் தாரமங்கலம் சேர்மேன் சுமதிபாபு உட்பட பெரியேரிபட்டி, அமரகுந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஜனன ஜாதகத்தை காண்பித்து ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று சென்றனர்.