ஓடசல் பட்டி அரசுப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

தர்மபுரி மாவட்டம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

Update: 2024-02-15 02:41 GMT

இலவச மிதிவண்டி வழங்கும் விழா

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி கடத்தூர் ஒன்றியம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கடத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சிவப்பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News