மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-07 11:11 GMT

மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மல்லசமுத்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு நேற்று, இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. மல்லசமுத்திரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம்வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு நேற்று, தமிழக அரசினர் விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் திருமலை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சுமதி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் கந்தசாமி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வடிவேல், ரம்யாகிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், அரிமாபுள்ளியப்பன், உதவி தலைமை ஆசிரியர்கள் சுசீலா, சங்கர், ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News