மல்லசமுத்திரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம்

மல்லசமுத்திரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-28 11:33 GMT

இலவச பல் பரிசோதனை முகாம்

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நடந்த தூய்மை பணியாளர்களுக்கான இலவச பல்பரிசோதனை முகாமிற்கு, தலைவர் திருமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில், 40தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். அதில், 4பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். மல்லசமுத்திரம் அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் லஷ்மிபிரியா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News