அரிமா சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல்லில் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Update: 2024-01-21 09:30 GMT

 நாமக்கல் தெற்கு அரிமா சங்கம், பொட்டிரெட்டிப்பட்டி அரிமா சங்கம் மற்றும் வளையபட்டி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் ஆளுநர் SMR குமரேசன் முகாமை தொடங்கி வைத்தார்.

சங்க தலைவர்கள் குமரவடிவேல், A.P.செல்வராசு, கலைச்செல்வன் தலைமையில் நடந்தது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் தாரிணி மற்றும் அதுல்யா குழுவினர் பங்கேற்று, பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இதில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், ஐ. ஒ. எல். பொருத்தும் கண் அறுவை சிகிச்சைக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரிமா நிர்வாகிகள் KRT.குப்புசாமி, பாலகிருஷ்ணன், நந்தகுமார், சுகுமார், வல்லவன், குகன், வீர சிவாஜி, மோகன்ராஜ், சரவணன், சக்திவேல்,குப்புசாமி, உள்பட பலர் முகாமிற்குகான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News