தாராபுரத்தில் திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம்

தாராபுரத்தில் திமுக திருப்பூர் மாவட்டம் மருத்துவர் அணி சார்பில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இலவச பொதுமக்கள் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-03-11 10:09 GMT

மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்கியம் அரசு தொடக்கப்பள்ளியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் மருத்துவர் அணி மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை சார்பில் இலவச இதய பரிசோதனை பொது மருத்துவ முகாம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

முகவிற்க்கு தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில் குமார் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு மருத்துவ முகாமில் தொடங்கி வைத்தார் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான சிலம்பரசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் தேவி குப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் இந்திராணி கலந்து கொண்டு 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கி இலவச மருத்து மாத்திரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News