இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா !
பழனியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டுமனைப் பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வழங்கினாா்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 05:59 GMT
இலவச வீட்டுமனைப் பட்டா
திண்டுக்கல் மாவட்டம், பழனி,ஆயக்குடி கோதைமங்கலம்,நெய்க்காரப்பட்டி பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி விண்ணப்பம் செய்தனா். இந்த நிலையில் பழனியில் தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி விண்ணப்பித்த 550பேருக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டச் செயலருமான ஐ.பி.செந்தில்குமாா் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பின்னா், 20 பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.