திருப்பூர் : இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்
பெல்லம்பட்டி மற்றும் மருதூர் ஊராட்சிகளை சார்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் கயல்விழிசெல்வராஜ் , மு.பெ சாமிநாதன் ஆகியோர் இலவச வீட்டுமனைபட்டா வழங்கினார்;
Update: 2023-12-23 06:50 GMT
இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் பெல்லம்பட்டி ஊராட்சியில் பெல்லம்பட்டி மற்றும் மருதூர் ஊராட்சிகளை சார்ந்த பயனாளிகளுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன்,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர், திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.