அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி துவக்கம்

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச கராத்தே பயிற்சியை போலீஸ் எஸ்பி., துவக்கி வைத்தார்.

Update: 2024-02-27 02:28 GMT

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியை மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் திட் டத்தின் மூலமாக, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அதியமான்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் என 80 மாணவிகளுக்கு, கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை வலிமையாகவும், தைரியமிக்க பெண்ணாக உருவாக்க இந்த கராத்தே பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் கராத்தே பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இதில் தர்மபுரி ஏடி எஸ்பி இளங்கோவன், டிஎஸ்பிக்கள் நாகலிங்கம், சிவராமன், இன்ஸ்பெக் டர் வேலுதேவன் மற்றும் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, கராத்தே பயிற்சியாளர் கிரண்ட் மாஸ்டர் ஹன்ஷி தென்னிந்திய கராத்தே டு அசோசியேஷன் தலைவர். நடராஜ் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கினார்.

Tags:    

Similar News