குமரியில் குப்பையில் வீசப்பட்ட இலவச மாத்திரைகள்
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியில் இருந்து மணக்கரை வழியாக வில்லுக்குறி செல்லும் வழியில் இந்த ஆண்டு (2023) காலாவதியாகும் கால்சியம் மாத்திரைகள் பெட்டியோடு கேட்பாரற்று கிடந்தன. தமிழ்நாடு அரசு இலவசமாக ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இந்த கால்சியம் மாத்திரைகள் குப்பைக்குள் கிடந்தது எப்படி என்று தெரியவில்லை.
பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை வழங்கி விட்டதாக அரசுக்கு கணக்கு காட்ட இப்படி வீணடிக்கப்பட்டதா? என தெரியவில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர். கால்சியம் மாத்திரைகள் இவ்வாறு வீணடிக்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தபட்ட துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்