இலவசமாக தலைக்கவசம் வழங்கல் !

திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா அருகே தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த முதியவர்கள் மற்றும் பெண்கள், பழுதடைந்த தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-04 10:23 GMT

விழிப்புணர்வு

திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா அருகே தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த முதியவர்கள் மற்றும் பெண்கள், பழுதடைந்த தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள் என 5 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் இன்று வழங்கினர். மேலும் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News