கப்பல் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படையில் சேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

Update: 2024-01-24 10:50 GMT

தஞ்சாவூர் மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படையில் சேர பயிற்சி அளிக்கப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் சேர பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இது குறித்து, கடலோர பாதுகாப்பு குழும பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவீன் பொது மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணியிலும் சேர்வதற்கு ஏதுவாக வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படுகிறது. 

அதன்படி இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது), மாலுமி பணிகள் மற்றும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளில் மீனவர்களின் வாரிசுகள் தேர்வு செய்யப்பட கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அளிக்கப்படவிருக்கும் (வழிகாட்டுதல்) சிறப்புப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்படுவதற்கு இணைப்பில் கண்டுள்ள வறையறுக்கப்பட்ட படிவத்தில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.02.2024, மாலை 5.45 மணியாகும். விண்ணப்ப படிவம் மற்றும் மேலும் விபரங்களுக்கு : https://drive.google.com/drive/folders/10LkWukq_HyRgbyrerIchqzQRhGx6A-wn கல்வித்தகுதி 1. எஸ்.சி./ எஸ்.சி (ஏ) மற்றும் எஸ்.டி. குறைந்த பட்ச வயது 18 வருடங்கள் அதிக பட்ச வயது 27 வருடங்கள் 2. எம்.பி.சி/டி.சி,பி.சி,பி.சி.எம். குறைந்த பட்ச வயது 18 வருடங்கள் அதிக பட்ச வயது 25 வருடங்கள் 3. "மற்றவை” (அதாவது எஸ்.சி/ எஸ்.சி (ஏ) மற்றும் எஸ்.டி., எம்.பி.சிஃடி.சி, பி.சி,பி.சி.எம். அல்லாதவர்கள்) குறைந்த பட்ச வயது 18 வருடங்கள் அதிக பட்ச வயது 22 வருடங்கள் வயது வரம்பு  வயது: (01.02.2003 முதல் 31.01.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு நாட்களும் உள்ளடக்கி) 1. நவிக் (பொதுப்பிரிவு) : 10 + 2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்த மதிப்பெண்களில் 50 விழுக்காடுக்கு கூடுதலாக இருக்க வேண்டும் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 விழுக்காடுக்கு கூடுதலாக மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்).

2. மாலுமி–II : 10 + 2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்த மதிப்பெண்களில் 50 விழுக்காடுக்கு கூடுதலாக இருக்க வேண்டும் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 விழுக்காடுக்கு கூடுதலாக மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்). உடற் கூறு அளவுகள்: (1) உயரம் குறைந்த அளவு 157 செ.மீ இருத்தல் வேண்டும். மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்தபட்ச உயரம் அளவில் மத்திய அரசின் ஆணையின்படி தளர்வு அளிக்கப்படும். (2) மார்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ இருக்க வேண்டும் மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பக விரிவாக்கம் இருத்தல் வேண்டும். எனவே, உரிய கல்வித் தகுதியும், உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags:    

Similar News