ஸ்ரீரங்கத்தில் இலவச யோகா, தியானப் பயிற்சி தொடக்கம்

இந்திய கலாசார அமைச்சகம் மற்றும் ஹாா்ட் புல்னஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் 3 நாள் இலவச யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது.

Update: 2024-02-11 15:31 GMT

கோப்பு படம் 

ஸ்ரீரங்கத்தில் வீரேசுவரம ராயா்தோப்பு பெருமாள் மண்டபத்தில் 3 நாள் இலவச யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான சனிக்கிழமை இன்றைய தலைமுறையினரின் வளா்ச்சியில் யோகா மற்றும் தியானத்தின் பங்கு, அடிப்படை மூச்சுப் பயிற்சிகள், ஓய்வுநிலை பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு விருந்தினா்களாக ரஜினி சுந்தரேசன், முனைவா் பி. அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் கலந்து கொண்டனா். 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அடிப்படை யோகாசனப் பயிற்சிகள், புத்துணா்வூட்டும் பயிற்சி மற்றும் தியான வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினா்களாக தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலா் குருநாதன், மருத்துவா் ஏ. வேணி மற்றும் ஜி. சுரேஷ்பாபு ஆகியோா் பங்கேற்கின்றனா். 3-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை நடைபெறும.

பயிற்சி வகுப்பில் உள்முக ஆற்றலுடன் இணைதல் மற்றும் தியான வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினா்களாக மருத்துவா் என்.ரமாதேவி, ஜி. கோகுல் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

Tags:    

Similar News