பாபநாசம் அருகே கணபதி அக்ரகாரம் வரதராஜ பெருமாள் கோவில் குட முழுக்கு
பாபநாசம் அருகே கணபதி அக்ரகாரம் வரதராஜ பெருமாள் கோவில் குட முழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-25 17:15 GMT
சாமி ஊர்வலம்
பாபநாசம் அருகே கணபதி அக்ரகாரம் கிராமத்தில் பூமி நீலா பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, சிற்பங்களுக்கு வர்ணங்கள் தீட்டி குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஆறு கால பூஜைகள் தொடங்கி நடந்தது. இன்று காலை யாத்ரா தானமும், அதனை தொடர்ந்து வாணவெடிகள், மேளதாளங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குட முழுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்