ராணிப்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவினை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
திறப்பு.ராணிப்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்ட பி வி தியாகராஜன் பூங்கா பூங்காவினை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.;
Update: 2024-02-25 09:16 GMT
பி வி தியாகராஜன் பூங்கா
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பிஞ்சு பகுதியில் உள்ள 29 வது வார்டில் இன்று 24 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட பி வி தியாகராஜன் பூங்கா திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று பூங்காவை திறந்து வைத்து பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் நகராட்சி ஆணையாளர் விநாயகம் நகர்மன்ற உறுப்பினர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.