மலைக்கோவிலூரில் விநாயகர், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மலைக்கோவிலூரில் விநாயகர், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-16 12:56 GMT

மலைக்கோவிலூரில் விநாயகர், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ள மலைக்கோவிலூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோவில்கள் புதுபிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று அதிகாலை மங்கள வாத்தியத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, ரக்க்ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற பிறகு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிக்கு பிறகு யாக வேள்வியில் பூஜிக்கபட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை சிவாச்சார்யர்கள் வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News