அதிகாரிகளை கண்டித்து கேங்மேன்கள் முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் முருகன் என்ற கேங்மேன் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் போஸ்டில் ஏறி வேலை பார்க்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை கண்டித்து நேற்று புதுக்கோட்டை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 200க்கும் மேற்பட்ட கேங் மேன்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கேங் மேனாக வேலை பார்க்கும் துரைசிங்கம் என்பவர் கூறும் போது, கேங்மேன் பணி என்பது மின்சார வாரியத்தில் ஈ.பி. போஸ்ட்களை ஊன்றுவது ஒயர்களை இழுப்பது போன்ற அடிப்படை வேலைகள் மட்டும் தான் என்றும் அதேபோல் மின்சாரம் பாயாத இடத்தில் தான் எங்களுக்கு வேலை ஆனால் இங்குள்ள அதிகாரிகள் எங்களை மின்சாரம் பாயக்கூடிய பகுதி வேலை வாங்குகிறார்கள். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக ஆலங்குடியில் அஜித் குமார் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் .அந்த குடும்பத்திற்கு இதுவரை எந்தவித இழப்பிடுகளோ அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையோ இதுவரை தரவில்லை, இது முறை இதுகுறித்து பலமுறை மனுஅளித்தும் அந்த மனு மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை நேற்று கந்தர்வக்கோட்டையில் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த முருகன் என்பவர் டிரான்ஸ்பர் மீது மேலே சென்று வேலை பார்க்கும் பொழுது மின்சாரத்தை துண்டிக்காமலேயே அதிகாரிகள் மேல ஏற சொன்னதாகவும் அப்படி ஏறி வேலை பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி கை கால்கள் கருகிய நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆள் பற்றாக்குறை நிறைய உள்ளதால் நாங்களே அனைத்து வேலையும் செய்கின்றோம். என்றும் அதேபோல் எங்களுக்கு பணி மாறுதல் வேண்டும். என கோரிக்கை வைத்து இன்று மனுஅளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.