கொலை வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:38 GMT
தூத்துக்குடியில் கடந்த 01.12.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரம்பட்டி மேல தெருவை சேர்ந்த ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (27) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிபாண்டி மகன் விக்னேஸ்வரன் (எ) விக்கி (34), முத்துப்பாண்டி மகன் பாலசிங் (42) மற்றும் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து (35) ஆகிய 3 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, அவர்கள் 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர், உட்பட 185 பேர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.