நாகர்கோவிலில் கஞ்சா விற்ற டெலிவரி பாய் கைது
கோட்டார் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உணவு டெலிவரி செய்யும் வாலிபரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-05-28 03:48 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் எஸ் பி சுந்தர வதனத்தின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கோட்டார் போலீசார் நேற்று பீச் ரோடு மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர் கணேசபுரத்தை சேர்ந்த அரவிந்த் ( 22) என்பதும், உணவு டெலிவரி செய்து வருபவர் என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் முடக்கினர்.