ஆம்பூர் அருகே கஞ்சா விற்றவர் கைது!
ஆம்பூர் அடுத்த மேட்டு கொள்ளை பகுதியில் கஞ்ச விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 09:23 GMT
ஆம்பூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேட்டு கொள்ளை பகுதியில் கஞ்சா விற்பதாக ஆம்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர், அப்பொழுது பாலாற்றங்கரை ஓரம் மேட்டு கொள்ளை பகுதியை சேர்ந்த பாட்ஷா என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து பாட்ஷாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.