ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது
விருதுநகரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்த இரயில்வே காவல்துறையினர்.;
கஞ்சா கடத்தியவர்
பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா கடத்தி வருவதாக விருதுநகர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து விருதுநகருக்கு ரயில் வந்தபோது ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ரயிலில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவரை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர் 3.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த அழகர் என்ற பெரியசாமி (27) என்பதும் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து அழகர் என்று பெரிய சாமியை காவல் துறையினர் கைது செய்து, அவர் கடத்தி வந்த 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து விருதுநகர் இருப்புபாதை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.