வெள்ளக்குளம் கோவில் அருகில் குப்பைக்குவியல்
வெள்ளக்குளம் சாலையில் பறக்கும் குப்பையால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது
By : King 24X7 News (B)
Update: 2024-03-01 09:00 GMT
காஞ்சிபுரம் வெள்ளக் குளம் தெருவில் உள்ள சந்தவெளியம்மன் கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் பின்புறம் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் குப்பையை முறையாக அகற்றாததால், அப்பகுதி குப்பை குவியலாக உள்ளது. குப்பையை மாடு, நாய் உள்ளிட்டவை கிளறுகின்றன. சாலையில் பறக்கும் குப்பையால், அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கோவில் அருகில் குவியலாக உள்ள குப்பையை அகற்றுவதோடு, சந்தவெளியம்மன் கோவில் அருகில் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.