ஆத்துார் ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்
ஆத்தூர் ஏரியில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Update: 2023-10-23 08:04 GMT
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துார் ஊராட்சியில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள ஆத்துார் பெரிய ஏரி, பொதுப்பணித் துறைக்கு சொந்தமானதாகும். சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, தொழுப்பேடு வரை செல்லும் வீராணம் சாலை ஏரிப்பகுதியில் செல்கிறது. பிளாஸ்டிக் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள், கட்டிப்போன தன்மையிலான சிமென்ட் மூட்டைகள், உணவகங்களின் தேவையற்ற கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை, இந்த ஏரியில் கொட்டி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது.குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.