குப்பை குவியல்: துர்நாற்றத்தில் பொதுமக்கள் அவதி

திண்டுக்கலில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-12-28 14:18 GMT

குவிந்துள்ள குப்பைகள் 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் உட்பட்ட கோவிந்தராஜ் நகரில் தெருவுக்கு தெரு குப்பைகள் குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் வசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கோவிந்தராஜ் நகர். இந்தப் பகுதியில் 1800க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு தெருக்கள் சேரும் குப்பைகளை வீடுகள் தோறும் துப்புரவு பணியாளர்கள் வாங்கி வந்தனர்.

சமீபகாலமாக பணியாளர்கள் வராததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி தெருக்களில் குவிந்து கிடக்கிறது. அதுவும் கோவிந்தராஜ் நகர் முதல் தெருவும், மெயின் ரோடும் சந்திக்கும் இடத்தில் குப்பை குவிந்துள்ளதால் பொதுமக்கள் வசிக்க முடியவில்லை.

Tags:    

Similar News