மலைபோல் குவிந்துள்ள குப்பை போரூர் சர்வீஸ் சாலையில் அவதி

மலைபோல் குவிந்துள்ள குப்பையால் போரூர் சர்வீஸ் சாலையில் மக்கள் செல்ல அவதிப்படுகின்றனர்.

Update: 2024-05-07 13:36 GMT

மலைபோல் குவிந்துள்ள குப்பையால் போரூர் சர்வீஸ் சாலையில் மக்கள் செல்ல அவதிப்படுகின்றனர்.


போரூர் சர்வீஸ் சாலையோரம் கொட்டப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை பெருங்களத்துாரில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும், மதுரவாயல் புறவழிச் சாலை அமைந்துள்ளது. மதுரவாயலில் இருந்து போரூர் சுங்கச்சாவடி செல்லும் சர்வீஸ் சாலையோரம், குப்பை கொட்டப்பட்டு, மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பை குவியலில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள் பறந்து, வாகனங்களுக்கு இடையே சிக்கி, விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், மர்ம நபர்கள், அந்த குப்பையை எரிப்பதால் எழும் புகை, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் எரிச்சல் ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ள குப்பையால், சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது: வானகரம் சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால், இப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். குப்பையில் இருந்து ஈக்கள் உற்பத்தியாகி சுற்றியுள்ள குடியிருப்புக்கு படையெடுப்பதால், மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News