ஒட்டன்சத்திரம் அருகே நீர்வரத்து கால்வாயில் குப்பை தேக்கம்
ஒட்டன்சத்திரம் அருகே நீர்வரத்து கால்வாயில் குப்பை தேங்கியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 12:19 GMT
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லப்பட்டி குளம் ,நீர் வரத்து கால்வாயில் குப்பை,இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் குளம் மாசடைந்து வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது கொல்லபட்டி குளம் .இதன் ஓரத்தில் ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோடு செல்கிறது.60 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் ஒரே நீராதாரம் அத்திகோம்பை ஊராட்சி வழியாக செல்லும் ஓடை ஒன்று மட்டும் தான்.
இந்த குளம் நிரம்பி மறுகால் செல்லும்போது குளத்தை சுற்றிய நுாற்றுக்கணக்கான விவசாய கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்படும். ஆனால் குளம் நிரம்பி மறுகால் சென்று பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
தற்போது குளத்தின் நீர் வரத்து ஓடையில் கழிவு பொருட்கள்,இறைச்சி கழிவுகள் வீசப்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.